புதிய ஓரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் மூலம் தாக்குதல் நடத்தினோம் புடின் விளக்கம்!
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை அல்ல என்பதை ரஷ்ய அதிபரின் உரை விளக்கியுள்ளது.
நேற்று உக்ரைனில் டினிப்புரோ நகரில் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்கியதாக மேற்று நாடுகளின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் குறித்த தாக்குதல் குறித்து நேற்று வியாழக்கிழமை ரஷ்ய அதிபர் தனது நாட்டு மக்களுக்கு ஒரு உரையை வழங்கினார்.
உக்ரைனின் டினிப்புரோ பகுதியில் உள்ள இராணுவத்தினரின் ஆயுத தொழிற்சாலைகள் மீது ரஷ்யாவின் புதிய இடைநிலை ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை அவர் விவரித்தார்.
ஹைப்பர்சோனிக் இடைநிலை ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணையின் பெயர் Oreshnik என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஏவுகணைத் தாக்குதல் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிய நெடுத்தூர ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி என அவர் குறிப்பிட்டார்.
இந்த புதியவகை ஹைப்பர்சோனிக் ஏவுகணை மாக் 10 வேகத்தில் செல்லக்கூடியதால் மேற்கு நாடுகளின் வான் எதிர்ப்பு ஆயுதங்களால் இடைமறித்துச் சுட்டு வீழ்த்த முடியாதது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உக்ரைனுக்கு உதவி செய்யும் நாடுகளுக்கு எதிராக ரஷ்யா இந்த புதிய ஏவுகணையை பயன்படுத்தக்கூடும் என்று புடின் எச்சரித்தார்.
இது ஒரு பரீட்சார்த்த தாக்குதல் என்றும் ஏற்கனவே இந்த ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த இராணுவ இலக்குகளை குறிவைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் உறுதி செய்தார். அத்துடன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற எச்சரிக்கை வழங்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த இடை நிலை ஏவுகணைகள் (Intermediate-range ballistic missile) பொதுவாக 3,000 முதல் 5,500 கிமீ வரை சென்ற தாக்குதல் நடத்தக்கூடியது.
ரஷ்யாவின் இந்த ஏவுகணை 10 Mach அல்லது 2.5-3km/s வேகத்தில் இலக்குகளைத் தாக்கும் திறன்கொண்டது.
Post a Comment