பாக்தாத் அருகே அமெரிக் நிலைகள் மீது தாக்குதல்!
ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் நிலைகள் மீது ரொக்கெட்டுகள் வீசப்பட்டன.
இன்று செவ்வாய்கிழமை அதிகாலை பாக்தாத்தில் உள்ள அமெரிக்க துருப்புக்கள் தங்கியிருந்த இராணுவ தளத்தின் மீது ரொக்கெட்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல ஈராக்கிய பாதுகாப்பு வட்டாரங்கள் மூன்று வரையான ரொைக்கெட்டுகள் வீசப்பட்டதாக தெரிவித்தன.
உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாக்தாத் விமான நிலையத்தில் உள்ள வெற்றித் தளம் மூன்று ரொக்கெட்டுகளால் குறிவைக்கப்பட்டது, அவற்றில் இரண்டு தளத்தின் சிறப்பு பாதுகாப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன. மூன்றாவது பயங்கரவாத எதிர்ப்பு சேவைக் கட்டளையின் தலைமையகத்திற்கு அருகில் விழுந்தது என்று ஒரு பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்தன.
அக்டோபர் 7 ம் தேதி காஸாவில் போர் வெடித்ததில் இருந்து, இஸ்ரேலுக்கு வாஷிங்டனின் இராணுவ ஆதரவு வழங்கியததை அடுத்து ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க துருப்புக்களின் தளங்களை குறிவைத்து ஈராக் சிரிய ரிசிடன் என்ற அமெரிக் எதிர்ப்புப் பிரிவினர் தாக்குதலைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.
Post a Comment