துணை ஆயுதக்குழுக்களுடன் தமிழரசு பங்கீடு!





கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக, ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளிக்கப்பட்ட வேட்பு மனுவே, நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப்படிவத்தில் காணப்பட்ட தவறுகள் காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு 23 அரசியல் கட்சிகளும், 33 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.இந்நிலையில், ஒரு அரசியல் கட்சியினதும் 6 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக முன்னாள் துணை ஆயுதக்குழுக்கள் என்றழைக்கு கட்சிகள் சகிதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் நால்வரும் ஏனைய கட்சிகளில் இருந்து மூவரும் திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.அவர்களுள் அரசியல் ஆய்வாளரென சொல்லிக்கொள்ளும் யதீந்திராவும் போட்டியிடுவதாக கூறப்படுகின்றது.

இதனிடையே திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவை இன்றையதினம் தமது கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்தன.


No comments