அநுரவை சந்தித்தார் சிறீதரன்!



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுரகுமார திஸாநாயக்கவை சந்திதுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதனிடையே சந்திப்பின் போது ஈழத்தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கும் எழுத்துமூல கோரிக்கைக் கடிதம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் நேரில் கையளித்துள்ளதாக சி.சிறீதரனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த காலத்தில் கட்டமைக்கப்பட்ட இன, மத, மொழி மற்றும் கலாசாரப் படுகொலைகள், கைதுகள், காணமலாக்கல்கள் உள்ளிட்ட துயரச் சம்பவங்கள் தினம்தினம் அரங்கேற்றப்படடிருந்தது. அத்தகைய துயர வரலாறுகள் தங்கள் ஆட்சியிலும் இடம்பெறாதிருக்கும் என்ற தமிழ் மக்களின் ஏகோபித்த நம்பிக்கையையும் தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்ப்பதாக சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி, மீள நிகழாமையை உறுதிசெய்தல், தமிழ் அரசியற்கைதிகளின் விடுதலை, மதத்தின் பெயரால் நடைபெறும் நிலப்பறிப்புகள் உள்ளிட்ட விடயங்களில் தங்களின் துரிதமானதும், சாதகமானதுமான நகர்வுகளையும் நடவடிக்கைகளையும் கோரி நிற்கிறேன் என சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.


No comments