வாக்கு வேட்டைக்காக கூட்டு?
தமிழ் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை ஒன்றித்து போட்டியிடுமாறு கொழும்பிலுள்ள இந்தியத் தூதுரகம் அழுத்தங்களை பிரயோகித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை இந்தியத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட போது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜாவிடம் தமிழரசு, உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் வெள்ளிக்கிமை இலங்கை வருகை தருவதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினை சந்திக்கவுள்ளார்.
இந்நிலையில் அதற்கு முன்னதாக அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்கிற்கும் அனுரவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அமெரிக்க தூதுவர், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக ஊடகங்களிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment