அனுரவுக்கு நற்சான்றிதழ் வழங்கும் சி.வி!



சர்ச்சைக்குரிய மதுபானச்சாலை அனுமதிப்பத்திர விவகாரத்தில் சிக்கியுள்ள சி.வி.விக்கினேஸ்வரன் புதிய ஜனாதிபதியின் போக்கு திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனுர தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்து செயற்பட்டால், அவருடன் இணைந்து பயணிப்போம் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை பிரித்தமையால் தமிழ் மக்கள் அனுரவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என, தெரிவித்திருந்தேன்.

நான் சொன்னது போன்றே தமிழ் மக்களின் வாக்குகள் அனுரவிற்கு குறைவாகவே கிடைத்தது. 

தமிழ் மக்களை நீங்கள் ஒரு தேசிய இனமாக , தேசியமாக கருதி செயற்பட்டால் நாமும் உங்களுடன் இணைந்து பயணிக்க முடியும் என கூறியிருந்தேன்.

இதுவரையில் அவரின் செயற்பாடு திருப்திகரமாக எனக்கு தெரிகிறது. எனது பாதுகாப்புக்கு இருந்த நாலு காவல்துறையினரையும்; திருப்பி அழைத்து விட்டார்கள். அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. மனஸ்தாபமும் இல்லையெனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments