சேவை செய்ய வருகிறாராம் அனுர?
இதுவரை காலமும் ஒரு சில குடும்பங்களே இந்த நாட்டை ஆட்சி செய்தன. ஆனாலும் நாட்டுக்கு எதையாவது செய்திருந்தால், மக்களை துன்ப துயரங்களிலிருந்து மீட்டெடுத்திருந்தால் பரவாயில்லை. இவ்வாறு தெரிவித்தார் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸ்ஸா நாயக்க
நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்நோக்கியுள்ளோம். எங்கள் நண்பர்கள் எங்கள் கண்ணெதிரில் இறந்ததை கண்டிருக்கிறோம். மரணம் எங்கள் வீட்டுக் கதவுகளை தட்டிக்கொண்டிருந்தது.
எனினும் இந்த நாட்டையும் மக்களையும் இந்த அனர்த்தத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்கான திடசங்கற்பத்தை நாங்கள் கைவிடவில்லை. 1994 இல் இருந்து நாங்கள் மீண்டும் ஓரளவு தலைத்தூக்கத் தொடங்கினோம்.
வெற்றிகளை பெற்றோம். பின்னடைவுகளை சந்தித்தோம். ஒரு சிலர் எம்மை விட்டு நீங்கிச் சென்றார்கள். குறைகூறல்கள் வந்தன. பொய்யான தகவல்கள் வரத்தொடங்கின. சதி வேலைகள் இயங்கத் தொடங்கின.
நாங்கள் இந்த அரசியலிலியிருந்து ஒரு சதத்தைக்கூட ஈட்டிக் கொள்ளாதவர்கள். பொதுப்பணத்தில் ஒரு சதம் கூட விரயம் செய்யாதவர்கள். நாங்கள் எவருமே தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஏதாவது ஈட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் அரசியல் புரிய வந்த மனிதர்கள் அல்ல. நாங்களும் பல்கலைக்கழகங்களுக்கு சென்று பட்டம் பெறுகிறோம். தொழில் ஒன்றை புரிந்து தனிப்பட்ட முறையில் ஒரு வாழ்க்கைத்தரத்திற்கு அமைவாக வாழ்க்கையை நடாத்திச் செல்லக்கூடிய மனிதர்கள் வ்வாறு தெரிவித்தார் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸ்ஸா நாயக்க
Post a Comment