பலமடைகிறார் சஜித்!
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பொதுக்கூட்டம் மினுவாங்கொடை நகரில் நடைபெற்றபோது, ஏ.ஜே.எம். முஸ்ஸம்மில், நந்திமித்ர ஏகநாயக்க ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் திலின துஷார மிரண்டும் மேடையில் ஏறினார்.
ஏ.ஜே.எம். முஸம்மில் 2011 முதல் 2016 வரை கொழும்பு மேயராக பணியாற்றினார். மேலும், 2017-2019 நல்லாட்சி காலத்தில் மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றியவர்.
பின்னர் அவர் 2019 இல் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார் மற்றும் 2020 இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவரை ஊவா மாகாண ஆளுநராக நியமித்தார்.
நந்திமித்ர ஏகநாயக்க முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சருமாவார்.
Post a Comment