சமஸ்டி:சஜித்திற்கு ஏதும் தெரியுமா?



சமஸ்டி குறித்து சஜித் பிறேமதாசா எத்தகையதேனும் உறுதி மொழிகளை வழங்கியுள்ளாராவென கேள்வி எழுப்பியுள்ளார் சிவஞானம் சிறீதரன்.

எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்ததன் மூலம் இலங்கை தமிழரசு கட்சி பிழையான முடிவை எடுத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு திரும்பிய நிலையில் கருத்து தெரிவிக்கையில்,இனப்பிரச்சினைக்கான தீர்வாக எந்த வேட்பாளர் சமஸ்டி குறித்து உத்தரவாதம் அளிக்கிறாரோ அவரையே ஆதரிப்பதென முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

அப்படியென்றால் சஜித் பிரேமதாசவிற்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கிய நிலையில் அவர் அளித்த உத்தரவாதம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென கட்சி முடிவெடுத்ததாக தெரிவிக்கப்பட்டபோதிலும் உரிய முறையில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமிழ் பொதுவேட்பாளருக்கு தனது ஆதரவில் எவ்வித மாற்றமும் இல்லை என சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.


No comments