21: மாலை 4 மணிக்கு பின்னரே வாக்கெண்ணும் பணிகள்!
தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 4 மணிக்கு பின்னரே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு உரிய தபால்மூல வாக்களிப்பு நேற்று (4) ஆரம்பமானது. 1500 அதிகமான வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அரச சேவையாளர்கள் வாக்களித்துள்ளனர். தபால்மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட மூன்று தினங்கள் நாளையுடன் நிறைவடையும்.
இந்த மூன்று தினங்களில் வாக்களிக்காதவர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தமது சேவை பிரதேசத்தில் உள்ள மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் வாக்களிக்க முடியும்.
தபால்மூல வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அமைதியான சூழல் காணப்பட்டது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகள் ஏதும் இடம்பெறுமாயின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் முறைப்பாடளிக்கலாம்.
Post a Comment