ஓட்டுக்குழுக்களிற்கு புதிய கூட்டணி!
தொடர்ந்தும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிறேமதாசா வெற்றி கணிப்பில் முன்னணியிலிருந்து வருகின்றார்.
இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைக்க பிரதமர் தினேஸ்குணவர்த்தன தலைமையில் இன்று புதிய கூட்டணி ஆரம்பமாகியுள்ளது. புதிய அரசியல் கூட்டணியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதமர் தினேஸ் குணவர்தனவை தலைவராகவும் , அமைச்சர் ரொமேஸ் பத்திரனவை செயலாளராகவும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி " எனும் பெயரில் ஆரம்பமான கூட்டணியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் பல கட்சிகள் பங்காளிகளாக அங்கம் வகிக்கின்றன.
கொழும்பில் இன்று நடைபெற்ற முன்னணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஈபிடிபியின் தலைவர் என்றவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிள்ளையான் உள்ளிட்டவர்கள் பங்காளிகளாக கலந்து கொண்டனர்.
Post a Comment