ஆளுநர்கள் அரசியலில் ஆட்டம்?
இலங்கையில் மாகாண ஆளுநர்கள் நெறிமுறைகளை தாண்டி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரச்சாரம் செய்தவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆளுநர்கள் அரசியல் சார்பற்று இயங்க வேண்டுமென்ற சட்ட நிபந்தனைகள் அரசியலமைப்பில் உள்ள போதிலும் பெரும்பாலான ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு குழுக்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பல ஆளுநர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக அரசியல் பிரச்சாரங்களில் தீவிரமாகப் பங்கேற்பதை அவதானிக்க முடிவதாக தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் கூறுகின்றன.
குறிப்பாக வடமேல் ஆளுநர் நசீர் அஹமட், தென் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா, மத்திய மாகாண ஆளுநர் லலித் கமகே, சப்ரகமுவ ஆளுநர் நவீன் திஸாநாயக்க, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் வடமத்திய ஆளுநர் மஹிபால ஹேரத் ஆகியோர் பகிரங்கமாக மக்கள் ஆதரவைத் திரட்டுவதிலும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதனிடையே ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் பதவி விலகுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டட அவர் 2020 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment