கிளிநொச்சியை ஆளும் பார் வேந்தர்கள்!



கிளிநொச்சியில் கடந்த சில மாதங்களுள் முளைத்த மதுபானச்சாலைகளது எண்ணிக்கை மக்களிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் மதுபானச்சாலை வைத்திருப்பவர்களின் விபரங்கள் வெளிவந்துள்ளது

கந்தசாமி கோவிலுக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் இடையில் உள்ள ஒரு பார் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏ-9 வைன் ஸ்ரோர் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது.ஆனாலும் தனை சந்திரகுமாரின் துணைவிக்கு வழங்கியதாக சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் துணைவியின் பெயரில் கரடிப்போக்கு சந்தியில் இரண்டு பார்கள் உள்ளன.

பரந்தனில் இருக்கும் இரண்டு பார்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனின் சகோதரனின் பெயரில் இருக்கும் நிறுவனத்தின் பெயரில் உள்ளது.

அதேவேளை 55ஆம் கட்டைக்கு அருகில் தொண்டமான்நகரில் அங்கயனின் தந்தை இராமநாதனின் பெயரில் ஒரு பார் திறக்கப்பட்டுள்ளது. 

கனகபுரம் வீதியில் உள்ளது தான் கிளிநொச்சியில் அதிகவிலைக்கு விற்கப்பட்ட மதுபானச்சாலையாகும்.இது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பியும் பினாமியுமான தயானந்தாவின் பெயரில் உள்ளது.

பூநகரி சந்தியில் உள்ள ஒன்று மதுபானச்சாலை சாராய நிறுவனத்தின் பெயரில் உள்ளது. இது யாழில் நகரில் ஏற்கனவே மதுபானச்சாலை வைத்திருக்கும் நபர் தான் வாங்கியிருக்கிறார்.

கொழும்பை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரால் கனகபுரம் வீதியில் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு பக்கத்தில் உள்ள பார் புலம்பெயர் வாழ் பிரபல தமிழ் வர்த்தகர் பெயரில் உள்ளது. அதுவும் ஒரு சாராய நிறுவனத்தின் பெயரில் தான் பதிவு உள்ளது.

எனினும் மதுபானச்சாலையொன்றை வைத்திருப்பதாக பிரச்சாரப்படுத்த தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பேரில் எந்தவொரு மதுபானச்சாலையும் இருக்கின்றமை உறுதிப்படுத்தப்படவில்லை.


No comments