நாடாளுமன்றத் தேர்தல் கட்டுப்பணம் செலுத்திய தமிழ் உணர்வாளர் அமைப்பு
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான முதலாவது கட்டுப்பணம் இன்று (30) செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தனது கட்டுப் பணத்தைச் செலுத்தினார்.
இம்முறை தமிழ் உணர்வாளர் அமைப்பின் சார்பாக சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் எட்டுப்பேரைக் களமிறக்கவுள்ளதாவும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
ஊழல்கள், மோசடிகள் அற்ற அரசியலை முன்னெடுப்பதற்காகவே தாம் களமிறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment