பிள்ளையானிற்கு வாக்களித்தால் அம்பாறைக்கு விடிவாம்
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தேர்தலிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.ஏதாவது ஒரு கருப்பொருளை கொண்டு வந்து தமிழர்களை குழப்புவார்கள்.இல்லாவிட்டால் சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருக்கின்றது வாக்களியுங்கள் என கூறுவார்கள்.இவ்வாறாக குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி சுமார் 62 வருடங்களாக தமிழர்களின் வாக்குகளை தமிழரசுக்கட்சியினர் பெறுகின்றார்கள்.தற்போது அம்பாறை மாவட்ட தமிழர்கள் படுகின்ற இன்னல்களை உதாரணமாக கூற முடியும்.ஆகவே இவ்வாறான விடயங்களை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியானது சிதறடிக்கப்பட்டுள்ளது.தற்போது இத்தேர்தலில் சகலரும் ஒன்றாக கேட்போம் என வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள்.ஒன்றாக சேர்ந்து கேட்பது ஆசனத்தை பெற்றுக்கொள்வது யாருக்காக என்பதை தெளிவாக கேட்க விரும்புகின்றோம்.தாங்கள் சார்ந்த சமூகத்திற்காக இவ்வாறான செயற்பாட்டில் இறங்குகின்றோம்.தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு எதுவும் செய்யாமல் அம்பாறை மாவட்ட மக்களை நடுத்தெருவில் விட்டவர்கள். மீண்டும் வந்து பொதுக்கட்டமைப்பில் சேருங்கள்.ஒரே சின்னத்தில் கேட்போம் என கூறி எதை செய்யப்போகின்றார்கள்.அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்ற இடத்தில் ஒரு வளைவுகோபுரத்தை நிர்மாணிக்க முடியாத வகையில் தான் இங்கு மக்கள் பிரதிநிதித்தவம் இருந்திருக்கின்றது.எனவே இவ்வாறு இருந்தால் அம்பாறை மாவட்ட மக்களை அழித்துவிட்டு யாருக்காக அரசியல் செய்ய போகின்றார்கள் என கேட்கின்றோம்.எனவே மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.
இம்முறை எல்லோரையும் ஒதுக்கிவிட்டு இத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கரத்தினை பலப்படுத்துவதன் ஊடாக தான் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பினை பலப்படுத்த முடியும்.குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பினை உறுதிப்படுத்த முடியும்.ஏனெனில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் புரட்சி காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது.எதிர் வருகின்ற 5 வருடங்கள் தமிழர்களை பொறுத்த வரை முக்கியமானதாகும்.இந்த சூழலில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கின்ற காலகட்டம்.கண்கெட்ட பிற்பாடு சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது.ஆகவே மக்கள் தீர்க்கமான முடிவுகளை எடுப்பார்கள்.தமிழரசுக்கட்சி உட்பட இதர கட்சிகளை மக்கள் ஏற்கனவே தூக்கி எறிந்திருக்கின்றார்கள்.
இதற்கு கடந்த கால அரசியல் பாதைகளை சீர்தூக்கி பார்த்தால் அனைவருக்கும் தெரியும் .தேர்தல் காலத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து சகல கட்சிகளும் கதைப்பார்கள்.நிஜத்தில் அவர்கள் அவ்வாறு நடப்பதில்லை.ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் நிஜத்தில் கொடுத்திருக்கின்றது.எங்களுக்கென்று மகளீர் பிரிவு இருக்கின்றது.இந்த மகளீர் பிரிவினர் தான் பெண்கள் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட உள்ளிட்ட வேட்பார்களை தெரிவு செய்து தருவார்கள்.அதன் பிறகு எமது கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
Post a Comment