பேஜரில் வெடிப்பு: 9 ஹிஸ்புல்லா போராளிகள் பலி: 2750 போராளிகள் காயம்!
இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் லெபனானில் ஹிஸ்புல்லா பயன்படுத்திய தொடர்பு சாதனமான கையடக்க பேஜர்கள் வெடித்ததில் குறைந்தது 9 ஹிஸ்புல்லா போராளிகள் இறந்தனர். மேலும் 2750 போராளிகள் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஒன்பது பேரில் எட்டு வயது சிறுமி ஒருவரும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 200 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
ஆயுத நிபுணர் ஒருவர் 10கிராம் தொடக்கம் 20 கிராம் வரையான இராணுவ தர உயர் வெடிமருந்துகள் பேஜரில் நிரம்பியிருக்கலாம். என்று கூறினார்.
வெடிமருந்து போலியான மின்னணு பாகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்
பெரும்பாலும் முகம், கைகள் மற்றும் வயிற்றில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இத்தாக்குதலுக்கு இஸ்ரேலைக் குற்றம் சாட்டிய ஹிஸ்புல்லா அந்நாட்டிற்கு நியாயமான தண்டனை கிடைக்கும் என்று கூறினர்.
இஸ்ரேல் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
லெபனான் முழுவதும் நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பின்னால் இஸ்ரேலின் மொசாட் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி வழங்கப்படும் எனவும் ஹிஸ்புல்லா தெரிவித்தது.
ஹிஸ்புல்லாவின் தலைவர் கடந்த பிப்ரவரியில் உறுப்பினர்களுக்கு மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை நிறுத்த உத்தரவிட்டார். அவர்கள் இஸ்ரேலிய உளவுத்துறையால் கண்காணிக்கப்படலாம் என்று எச்சரித்தார்.
இதனைத் தொடர்ந்து புதிய பெயரினான பேஜரை லெபனானில் ஹிஸ்புல்லா இறக்குமதி செய்தபோது அந்த விநியோகச் சங்கிலியில் இடையே பேஜர்களில் வெடிமருந்து பொருத்தப்பட்டுள்ளன. இது ஒரு நீண்டகால் திட்டமிடலுடன் செய்யப்பட்டுள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்புக்கு முன்னர் பேஜர்கள் சூடுபிடித்ததாக சிலர் உணர்ந்ததாக ஹிஸ்புல்லா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 3000 பேஜர்கள் வழங்கப்பட்டதாகவும் அவை பெரும்பாரும் ஹிஸ்புல்லா அமைப்பின் பொறுப்பு நிலையில் உள்ளவர்கள் வைத்திருந்தாகவும் கூறப்படுகிறது.
லெபனான் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. லக்ட்ரானிக் பேஜர் வெடித்ததில் லெபனானுக்கான ஈரான் தூதர் மொஜ்தபா அமானி லேசான காயம் ஏற்பட்டது.
அமானிக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளித்த லெபனானுக்கு நன்றி தெரிவித்ததாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
Post a Comment