கதிர்காம கந்தனிற்கும் பார்!



அரசாங்கம் கதிர்காம புண்ணிய பூமிக்கும் மதுபான சாலை அனுமதி பத்திரத்தையும், பியர் அனுமதி பத்திரத்தையும் வழங்கி இருக்கிறது. விரைவில் மிகிந்தலை புண்ணிய பூமியிலும், அடமஸ்தானத்திலும் சொலஸ்மஸ்தானத்திலும் மதுபான சாலைகளை திறக்கக்கூடும். மதுபான சாலை அனுமதி பத்திரங்களையும், வைன் ஸ்டோர்ஸ் அனுமதி பத்திரங்களையும் வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையாக மாறி இருக்கின்றது. தாம் அதிகாரத்துக்கு வந்த உடனே இந்த அனுமதி பத்திரங்கள் அனைத்தையும் இரத்து செய்வோம். வரப்பிரசாதங்களுக்காகவும் சலுகைகளுக்காகவும் அரசியல் இலாபங்களுக்காகவும் வழங்கப்பட்ட இந்த சந்தோசங்கள் அனைத்தையும் அகற்றுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்பொழுது ரணிலும் அநுரவும் திருமண விருந்து சாப்பிடுகின்றனர். இந்த நாட்களில் அவர்கள் அரசியல் தேனிலவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். தன்னை தோல்வியடையச் செய்வதே அவர்களுடைய டீல் ஆகும். இந்த திருட்டுத்தனமான மோசடியான டீல்களுக்கு இடமளிக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டினார்.

21 ஆம் திகதி வரை அவர்களுக்கு விருப்பமான முறையில் டீல்களை செய்து கொண்டு அரசியல் தேனிலவை கொண்டாட முடியும். நாட்டு மக்கள் இவர்களின் திருட்டு  டீல்களையும் தேனிலவுக் கொண்டாட்டத்தையும் நிறைவுக்கு கொண்டு வருவார்கள் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


No comments