சிவாஜிக்கு ஒரு நீதி -அரியத்திற்கு இன்னொன்று!



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனித்து ஜனாதிபதியாக களமிறங்கிய போது வாய் மூடியிருந்த பல்கலைக்கழக சமூகம் தற்போது வெளியே வந்துள்ளது.அப்போது சிவாஜிலிங்கம் மகிந்தவிடம் பணம் வாங்கியே போட்டியிடுவதாக பிரச்சாரம் செய்யப்பட்டுமிருந்தது.

இதனிடையே எங்களுடைய போராட்டதின் மிகப்பெரிய ஆயுதமாக வாக்கு என்ற புள்ளடியை பயன்படுத்தி எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு வாக்களியுங்கள் என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் பேரிலான குழுவொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

“யாழ் பல்கலைக்கழகமானது தமிழ் தேசியத்தை வளர்ப்பதற்காகவும் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதற்காகவும் தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்களை எதிர்ப்பதற்காகவும் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக பாடுபட்டுள்ளோம்.

பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பொங்கு தமிழ் நிகழ்வுகள் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஒரு பேச்சுவார்த்தை உடன்படிக்கை வருவதற்கு காரணமாக அமைந்தது.

2010 இற்கு பின்னரான காலகட்டத்தில் சிங்கள ஜனாதிபதிகளை ஆதரிக்குமாறு பல்கலைக்கழக சமூகம் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. வேண்டுகோளும் விடவில்லை.

தமிழ் கட்சிகள் குறிப்பிட்ட ஜனாதிபதிகளை ஆதரித்த போதும் நாங்கள் தமிழ் தேசிய விரோத செயற்பாடுகளில் பல்கலைக்கழக சமூகம் ஈடுபடவில்லை. ஆனால் இந்த முறை வரலாற்றுத் தேவைக்காக உங்ளிடம் கோரிக்கை விடுக்கின்றோம். தமிழ் தேசியத்தை பாதுகாப்பதற்காக நாங்கள் பல்லாயிரக்கணக்கான வீரர்களை ஆகுதியாக்கியிருக்கின்றோம்.

எங்களுடைய போராட்டதின் மிகப்பெரிய ஆயுதம் வாக்கு என்ற புள்ளடியை ஏந்தி மண்ணுக்காக மரணித்த புனிதர்களை நினைத்து எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு வாக்களியுங்கள்.“ என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் பேரிலான குழுவொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.


No comments