கடந்த ஆண்டு வெப்பத்தால் ஐரோப்பாவில் 50,000 பேர் வரையில் இறப்பு!
கடந்த ஆண்டு ஐரோப்பாவில் 47,000 க்கும் அதிகமானோர் கடுமையான வெப்பம் காரணமாக இறந்துள்ளனர் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.
பார்சிலோனா இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் மாடலிங் வெளியிட்ட அறிக்கையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் தெற்கு ஐரோப்பா கண்டத்தில் அதிக இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
வெப்பம் காரணமாக ஒரு மில்லியன் மக்களில் கிரீஸ் 393 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து பல்கேரியாவில் 229 இறப்புகள் நடந்துள்ளன. இத்தாலி 209 இறப்புகள் மற்றும் ஸ்பெயினில் 175 இறப்புகளும் யேர்மனியில் 76 இறப்புகள் என பட்டியல் நீளுகின்றது.
பகுப்பாய்வு செய்யப்பட்ட பெரும்பாலான நாடுகளில் ஆண்களை விட அதிகமான பெண்கள் வெப்பத்தால் இறந்தனர். மேலும் வயதானவர்கள் குறிப்பாக மரணத்திற்கு ஆளாகிறார்கள்.
சவூதி அரேபியாவில் ஒரு கடுமையான வெப்ப அலையானது வருடாந்திர ஹஜ் புனித யாத்திரையின் போது மெக்கா நகரில் 1,000 க்கும் மேற்பட்டவர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. வெப்பநிலை ஐம்பது டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
Post a Comment