துருக்கியில் கத்திக்குத்து: ஐவர் காயம்!
வடமேற்கு துருக்கியில் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் கத்தியால் குத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் அங்காராவிற்கு மேற்கே 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எஸ்கிசெஹிரில் உள்ள ஒரு மசூதியில் தொழுகைக்குப் பின்னர் திறந்தவெளி கோப்பி அருந்தகத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்களை 18 வயது இளைஞர் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அரசு நடத்தும் அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
ஆர்டா கே என்ற தாக்குதலாளி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலாளி வீடியோ கேமால் பாதிக்கபட்டவர் என முதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலின் போது ஹெல்மெட், மண்டை ஓடு மற்றும் குண்டு துளைக்காத அங்கி அணிந்திருந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்திய நபர் தனது உடுப்பில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் சமூக ஊடகங்களில் கத்தியால் குத்தப்பட்ட காட்சியை ஒளிபரப்பியதாக ஹேபர்டர்க் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
Post a Comment