பனிக்குகை இடித்து வீழ்ந்தது: ஒருவர் பலி! இருவரைக் காணவில்லை!
ஐஸ்லாந்தில் சுற்றுலா குழு ஒன்று சென்று கொண்டிருந்த போது பனி குகை ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் பலத்த காயம் அடைந்தார். மேலும் இருவரை காணவில்லை என இன்று திங்கள்கிழமை ஐஸ்லாந்துக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
25 பேர் கொண்ட சுற்றுலாக் குழு ஒரு வழிகாட்டியுடன் ப்ரீடாமெர்குர்ஜோகுல் பனிப்பாறையை சுற்றிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள Breidamerkurjokull, தெற்கு Vatnajökull இல் இருந்து பனிப்பாறை குளம் Jökulsárlón வரை நீண்டுள்ளது. இது ஐஸ்லாந்தின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
நான்கு பேர் பனிக்கட்டிக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். இரண்டு பேர் ஏற்கனவே பனிக்கட்டியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்று சுடர்லேண்ட் காவல்துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
பனிக் குகைக்குள் சிக்கிய இருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கடலோர பாதுகாப்பு உலங்கு வானூர்திகள் சம்பவ இடத்திற்கு நோயாளர் காவு வண்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.
மீட்பு பணி மிகவும் கடினமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment