ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் பெரும் தாக்குதல்களைத் தொடங்கின!
தெற்கு லெபனானின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகவும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் சயீத் கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அதிகாலை 5 மணியளவில் முதல் ஹிஸ்புல்லா அமைப்பினர் பெரும் எண்ணிக்கையில் ரொக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
ஹிஸ்புல்லா தாக்குதலை அடுத்து 48 மணி நேரத்திற்கு ராணுவ அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையில் போர் இராணுவ கூட்டம் நடந்த நிலையில், அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4.30 மணிளவில் இஸ் வான்படையினர் பல தெற்கு லெபனானில் பல இடங்களில் தாக்குதலை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாவும் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் பெரிய சேதங்கள்குறைவாக உள்ளது என அறிவிக்கப்பட்டது.
ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி 320 கத்யுஷா ரொக்கெட்டுகளை வீசியதாகவும், 11 இராணுவ இலக்குகளைத் தாக்கியதாகவும் கூறியது கூறியது.
கடந்த மாதம் மூத்த தளபதி ஃபுவாட் ஷுக்ரை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு பதிலடி கொடுக்கும் முதல் கட்ட தாக்குதல் இது என்ற ஹிஸ்புல்லா அறிவித்தது.
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் இராணுவ தளங்கள் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
Post a Comment