பிரான்ஸ் ஜெப ஆலய குண்டுவெடிப்பு சந்தேக நபர் கைது!


பிரான்சின் தெற்கு ரிசார்ட் லா கிராண்டே-மோட்டில் உள்ள பெத் யாகோவ் ஜெப ஆலயத்திற்கு வெளியே  தீ வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்துள்ளதாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று  ரிசார்ட் லா கிராண்டே-மோட்டில் உள்ள பெத் யாகோவ் ஜெப ஆலயத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்தார்.

இரண்டு கார்கள் வெளியில் கொளுத்தப்பட்டதால் வெடி விபத்து ஏற்பட்டது.

வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிவாயு கொள்கலன் இருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் பிரெஞ்சு ஊடகங்களுக்குத் தெரிவித்தன.

சந்தேக நபர் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியதாகக் கூறப்படுகிறது. ஜெப ஆலயத்தின் பல நுழைவு கதவுகளுக்கும் தீ வைத்துள்ளார்.

தாக்குதலாளி நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மன் தெரிவித்தார்.

Nîmes நகரில் அவரைக் கைது செய்ய வந்த காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சந்தேக நபர் காவல்துறையினரால் சுட்டுக் காயமடைந்ததாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் பயங்கரவாத செயல் என்று அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.

யூத சமூகத் தலைவர் யோனாதன் அர்ஃபி, இந்தச் சம்பவம் யூதர்களைக் கொல்லும் முயற்சி என்றும், சனிக்கிழமை காலை வழிபாடு செய்பவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது என்றும் கூறினார்.

No comments