டெலோ யாருக்கு?



ஜனாதிபதி ரணிலிடம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த பிரதிநிதிகள் கை நனைத்துள்ள நிலையில் பொதுவேட்பாளரிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துவருகின்றமை சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

ஒருசாரார் பொதுவேட்பாளர் ஆதரவு பற்றி பேசிவருகையில் நன்றி மறக்காது விநோனோகதரலிங்கம் அதனை எதிர்த்துள்ளார்.

இந்நிலையில் கட்சியின் மத்திய குழு கூட்டம் வுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது தொடர்பாகவும் வருகின்ற நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பாகவும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி கட்சியின் தேசிய அமைப்பாளர் பிரசன்னா மற்றும் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


No comments