பாதுகாப்பு தேவையில்லை!



ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுமார் இருபது வேட்பாளர்கள் தமக்கு பாதுகாவலர்கள் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

எனினும் தமிழ் பொதுவேட்பாளரது பாதுகாவலர்கள் நிலை தெரியவரவில்லை

பாதுகாப்பு கோரிய  வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



No comments