3கோடியில் ஜனாதிபதி வேட்பாளர்


இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 40 பேர் வரை போட்டியிடலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் எதிர் தரப்புக்களது வாக்குகளை சிதறடிக்க போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுவருகின்றனர். 

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக 03 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட குழுவினரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இன்று காலை கட்டுப்பணத்தை செலுத்திய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க, செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

.2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் செயலாளர் நிஹால் பிரேமகுமார தேசப்பிரிய இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஜனக ரத்நாயக்கவின் சார்பில் பத்திரத்தை கையளித்தார். 

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்  ஜானக ரத்நாயக்கவின் பெயரை முன்மொழிவதற்கு 300 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற போது, கட்சியின் செயலாளர் மற்றும் பல செயற்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக  இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பேச்சாளர்  தெரிவித்துள்ளார். .

பிரபல வர்த்தக வளாகம் ஒன்றில் வைத்து குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments