பொதுக்கட்டமைப்பு:குறுகிய அரசியல்?
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பிற்காக ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக பொதுக்கட்டமைப்பு செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.ஆனால் அதனை பொருட்படுத்தாது தமது குறுகிய அரசியலில் சிலர் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமையாக விடயங்களை கையாளுவோம், ஒற்றுமையாக பொறுப்புக் கூறுவோம், கூட்டுப் பொறுப்பு என்றெல்லாம் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.அதனை மீறி பொதுக்கட்டமைப்பு செயற்பட முடியாதென வடமாகாண மீனவ சம்மேளனத்தின் பேச்சாளர் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தமிழ் மக்கள் சார்ந்து ஒரு விடயத்தை முன்வைத்து வெளிப்படையாக ஊடக சந்திப்பை நடத்தி ஒவ்வொரு கட்டத்திலும் தெளிவு படுத்த வேண்டியதும் பொதுக் கட்டமைபின் கடமை.
தற்போது தமிழ் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார், வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதற்கான பிரச்சாரங்களை விடுத்து, வேறு ஜனாதிபதி வேட்பாளர்களுடன் சென்று பேச்சுவார்த்தைகளில் பொதுக் கட்டமைப்பு ஈடுபட்டால், கட்டமைப்பின் மீதும் பொது வேட்பாளர் மீதும் தமிழ் மக்களுக்கு எவ்வாறு ஆதரவு இருக்கும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
அவ்வாறொனதொரு பின்னணியில், பொதுவேட்பாளர் கட்டமைப்புடன் தொடர்புடைய கட்சிகள் ரணில் சஜித் உடன் கட்சிகள் பெயரில் சந்திப்புக்களை நடாத்தியமாக கூறுகின்றன.அவ்வாறாயின் சி.வி.விக்கினேஸ்வரன் ஏன் சந்திப்புக்களிற்கு செல்லவில்லை.ஜனநாயகப்போராளிகள் கட்சியினர் எவ்வகையில் சந்திப்புக்களில் பங்கெடுத்திருந்தனர் என கேள்வி எழுப்பியுள்ளார் அன்னராசா.

Post a Comment