சஜித்துடன் மேடையேறும் றிசாத்!



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் என, அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (14) தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று (14) மாலை வெள்ளவத்தை, கிரீன் பெலஸ் மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரான சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இன்று (14) கொழும்பில் இடம்பெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுகப்பட்டது.

No comments