குரங்கம்மை: அவசர நிலையை அறிவிக்கிறது உலக சுகாதார அமைப்பு!


ஆபிரிக்காவில் குரங்கம்மையால் (Mpox) இதுவரை 500க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இதனால் குரங்கம்மை ஏனைய ஆபிரிக்க நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற அஞ்சம் எழுந்துள்ளதால் ஆப்பிரிக்க சுகாதார அதிகாரிகள் அதிக தடுப்பூசிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் வைரஸின் புதிய பதிப்பு வெளிவந்துள்ளது மற்றும் ருவாண்டா , புருண்டி மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு வேகமாக பரவியுள்ளது .

இதையடுத்து உலக சுகாதார அமைப்பு நேற்றுப் புதன்கிழமையன்று mpox பரவுவதை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது.

குரங்கம்மை வைரஸ் ஆனது நெருங்கிய தொடர்புகள் மூலம் பரவக்கூடும். இதன் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் தோலில் அதிக புண்களை ஏற்படுத்தும்.

நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளது. இவற்றில் காங்கோ நாட்டில் 96 சதவீதம் அளவுக்கு பாதிப்புகளும் மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

கொங்கோவில் 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து இருந்தது.

நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விசயம். இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் தெரிவித்தார்.

No comments