மதுபானச்சாலை அனுமதி ரத்து!



கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவளிக்க மதுபானச்சாலைக்கான அனுமதியை பெற்றதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து நிதி அமைச்சராக சுமார் 200 புதிய மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்திமன் 12ஆம் திகதி திங்கட்கிழமை 'இலங்கை மதுபான உரிமையாளர்களின் சங்கம்' மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

சங்கத்தின் உபதலைவர் பிரசன்ன விதானகே உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு, மதுவரித் திணைக்களத்தின் தலைவர் அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கட்டுப் பணம் செலுத்தியுள்ள சந்தர்ப்பத்தில் , அவருக்கு கீழ் இயங்கும் மதுவரித் திணைக்களம் புதிய 200 அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளமை தேர்தலை பாதிக்கும் எனத்தெரிவித்துள்ளனர்.

அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னர் குறித்த சட்ட விரோத நடவடிக்கையை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனிடையே கூட்மைப்பிலும் தமிழரசுக்கட்சியிலும் இருவர் மதுபானச்சாலைக்கான அனுமதிப்பத்திரங்களை ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.


No comments