ஜனாதிபதி வேட்பாளரிடம் இலஞ்சம் வாங்க முற்பட்டவர்கள் கைது
எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 7 பேர் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவிடமிருந்து ரூ. 30 மில்லியன் தொகையை இலஞ்சமாக பெறும்போது கைது செய்யப்பட்டதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
ஜனக ரத்நாயக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் லங்கா பொதுஜன கட்சி சார்பில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில் அக்கட்சியின் உறுபுரிமையை பெறுவதற்காக ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் பெறும் போதே பொரளையில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment