இரண்டு கோடிக்கு நன்றி:குகதாசன்!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்கு சேர்த்துவழங்கும் புகலிடமாக தமிழரசுக்கட்சி மாறியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. திருகோணமலை மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று புதிய தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமையினில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் (04) இடம் பெற்றுள்ளது.
திருக்கோணேஸ்வர ஆலய சூழல் சிங்களமயமாக்கப்படும் விவகாரம் மற்றும் இலங்கை முப்படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய காணிகள் விடுவிப்பு, உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவை தனித்து சந்தித்திருந்த சண்முகம் குகதாசன் சுமார் இரண்டு கோடி வரை நிதி ஒதுக்கீட்டை பெற்றிருந்தார்.
இதனிடையே முன்னதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவு பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment