பத்துக்கோடி தந்திருந்தாலும் விரட்டுவோம்:சுமா!
ஜனாதிபதியை தனித்து சந்தித்து பத்துக்கோடி வரையிலான நிதி ஒதுக்கீட்டை பெற்றுள்ள எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தியாக வேண்டும். அதுதான் அரசமைப்பு ஏற்பாடு. ஏதேனும் வகையில் அதைக் குழப்பித் தேர்தலைப் பிற்போட முயற்சித்தால் ஜனாதிபதியையும் அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பர்கள் என தெரிவித்துள்ளார்.
"ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்பது அரசமைப்பிலும் தெளிவாக உள்ளது. அதை இப்போது உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தி விட்டது.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான அரசமைப்புப் பிரிவுகளில் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டிய தேவை எதுவும் இல்லை.
ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்பது திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்பட்ட விடயம். ஆனால், அந்தப் பிரிவுக்கு திருத்தம் கொண்டு வருகின்றோம் என்று குழம்பத்தை ஏற்படுத்த ஜனாதிபதியின் தரப்பு முயலுகின்றனர் என்று தோன்றுகின்றது.
அந்தப் பிரிவைத் திருத்த சர்வஜன வாக்கெடுப்பு என்ற நிலைப்பாடு வருமானால், அதைக் காட்டி தம்முடைய பதவிக்காலம் 5 வருடங்கள்தானா என்பதை ஒட்டிய சர்ச்சையைக் கிளப்பலாம் என்று ஜனாதிபதி எண்ணுகின்றார் போலும்.
எது, எப்படி என்றாலும், நாடு வரும் ஒக்டோபர் 17 இற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. அது சட்ட ரீதியான கட்டாயம்.
அதில் கை வைக்க அல்லது தேர்தலைத் தள்ளிப்போட முயற்சி எடுக்கப்பட்டால் அரசையும் ஜனாதிபதியையும் மக்கள் வீதி வீதியாக துரத்தி அடிப்பார்கள். ஓட ஓட விரட்டுவார்கள். அதனை முன் எச்சரிக்கையாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்." – என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment