லிப்சிக் விமான நிலையத்தில் போராட்டம்: விமானப் போக்குவரத்துகள் தாமதம்!
யேர்மனி கிழக்குப் பதியான லிப்சிக் / ஹாலே (Leipzig / Halle) விமான நிலையத்தில் சுற்றுச்சூழல் குழு செயற்பாட்டாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைத்தப்பட்டது.
ஐந்து உறுப்பினர்கள் விமான நிலையத்தில் உள்ள டாக்ஸிவேயில் தங்களை ஒட்டிக்கொண்டனர். மேலும் இருவர் தங்களை ஒட்டிக்கொள்ளும் முயற்சியிலிருந்து தடுக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இறுதியில் காலை 5 மணியளவில் இருந்து அகற்றப்பட்டனர்.
இந்த நடவடிக்கையால் சில விமானங்களில் சிறிது தாமதம் ஏற்பட்டது. அத்துடன் அதிகாலையில் சரக்கு விமானங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Post a Comment