உள்ளுராட்சி தேர்தல் அவசியம்!



இலங்கையில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆகியோர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை நடத்தாததால் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பொன்றை வழங்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு  நிறுவனம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று (21) வழங்கி  உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இதனிடையே உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொள்வதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கூடி, தீர்மானம் எடுக்கும் என்றார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றது.

தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படாததன் காரணமாகவே பிரச்சினை எழுந்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


No comments