பிரான்ஸ் தேர்தல் முதல் சுற்றில் தீவிர வலதுசாரிகள் வெற்றி பெற்றனர்
பிரான்சில் வரலாற்று சிறப்புமிக்க திடீர் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இது 40 ஆண்டுகளில் மிக அதிகமான வாக்குப்பதிவாகும்.
மரைன் லு பென்னின் பிரான்சின் தீவிர வலதுசாரிக் கட்சியான தேசிய பேரணி (National Rally ) 33.4% வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றது.
இடதுசாரி கூட்டணியான புதிய பாப்புலர் ஃப்ரண்ட் (New Popular Front) 27.9% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
தற்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் மையவாதக் கூட்டணி (centrist alliance Together) 20.7% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யூலை 7 ஆம் திகதி இரண்டாம் சுற்று நடைபெறவுள்ளது.
அடுத்த சுற்றில் யார் நாடாளுமன்றத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் போகிறார்கள் என்பது தெளிவாகத் தொியவில்லை.
வலதுசாரிக் கட்சியான தேசிய பேரணி வெற்றி பெறுவதைத் தடுக்க இடதுசாரி கூட்டணியான புதிய பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் மக்ரோனின் மையவாதக் கூட்டணி புதிய தந்திரோப வாக்களிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று தேர்தலில் தீவிர வலதுசாரிகள் வெற்றிபெற்றால் இது இரண்டாம் உலகப் போரின் நாஜி ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் நாட்டின் முதல் தீவிர வலதுசாரி அரசாங்கமாக இது மாறும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏனைய கட்சிகள் ஒன்று சேர்ந்து தீவிர வலது சாரியான தேசிய பேரணியைத் தோற்கடிக்க வியூகங்கள் வகிப்பார்கள் என ஆய்வாளகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Post a Comment