இராணுவ மரியாதை இல்லை:மத அனுட்டானம் மட்டுமே!
மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் அவரது சொந்த இடமான திருகோணமலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அரச நிகழ்வாக நடைபெறவுள்ளது.
முன்னதாக நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குக் கொழும்பு - பொரளையில் ஏ.எவ்.றேமண்ட் மலர்ச்சாலையில் இரா.சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அங்கிருந்து அவரது பூதவுடல் நாளைமறுதினம் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டு, அங்கு வைத்து அஞ்சலியும் மரியாதையும் செலுத்தப்படவுள்ளது.
அதற்கேதுவாக நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவிருந்த நாடாளுமன்ற விசேட கூட்டத்தொடர் கைவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.
புதன்கிழமை பிற்பகல் 4 மணிக்கு இரா.சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரது சொந்த இடமான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.
இறுதிக் கிரியைகளை அரச நிகழ்வாக நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டாலும் இந்தியாவில் வசித்து வரும் இரா.சம்பந்தனின் குடும்பத்தவர்களது கோரி;க்கைப்படி மத அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என்றும், இராணுவ மரியாதை நிகழ்வுகள் இடம்பெறாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழரசுக்கட்சி அலுவலகங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளபோதும் வடகிழக்கில் மக்கள் நினைவேந்தல்கள் பற்றி தகவல்கள் இல்லை.
Post a Comment