திண்ணை யாருக்கு?

 


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் காலமானதால் வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கனடா குகதாசன் என்றழைக்கப்படும் சண்முகம் குகதாசன் தெரிவுசெய்யப்படவுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட விருப்பு பட்டியலில் இரா.சம்பந்தனுக்கு அடுத்துள்ள சண்முகம் குகதாசன் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலில் 16,770 வாக்குகளை பெற்றிருந்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு விருப்பு வாக்குகளை பெற்றவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் குகதாசன் உள்ளார்.

இந்நிலையிலேயே, இரா.சம்பந்தன் காலமானதால் வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் தெரிவுசெய்யப்படவுள்ளார்.

நியமனம்  தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரா.சம்பந்தனின் வெற்றிக்காக பாடுபட்டதுடன் பெருமளவு நிதியை தேர்தல் பிரச்சாரத்திற்கு எடுத்துவந்ததாக குகதாசன் வர்ணிக்கப்பட்டிருந்தார்;. 

எனினும் முதுமை மற்றும் இயலாமை காரணமாக பதவியை இரா.சம்பந்தன் ராஜினாமா செய்ய கோரிக்கைகள் வலுத்திருந்த போது குகதாசனை ஒதுக்கிவைப்பதில் இரா.சம்பந்தன் முனைப்பு காண்பித்தமை குறிப்பிடத்தக்கது.


No comments