மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு யூலை கவனயீர்ப்புப் போராட்டம்!!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நடைபெற்றது.
கறுப்பு ஜூலை 41, வது ஆண்டு நினைவாக இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுத்திருந்தனர்.
கையில் ஒப்படைத்த எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது, காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது, என்பதை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கூறி போரட்டத்தை முன்னெடுத்தனர்.
Post a Comment