மணல் வியாபாரம் சூடு பிடித்தது!
வன்னியில் இலங்கை காவல்துறை மற்றும் வனவளத்திணைக்கள கூட்டு சட்டவிரோத மணல் அகழ்வு சூடு பிடித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல் காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது, புதன்கிழமை (24) அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த கமக்கார அமைப்பின் செயலாளர் மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் இந்த சம்பவம், வியாழக்கிழமை(24) இடம்பெற்றுள்ளது.
தனது நெல்லினை அறுவடை செய்து வீதியில் காயவைத்துவிட்டு இரவு காவல் காத்து வந்துள்ள நிலையில் வீதியோரமாக உறங்கிக்கொண்டிருந்துள்ளார்
புதன்கிழமை (24) அதிகாலை 3.00 மணியளவில் இனம் தெரியாத நபர்களால் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்விளான்குளம் பகுதியினை சேர்ந்த கமக்கார அமைப்பின் செயலாளரான 42 அகவையுடைய செல்லையா கிருஸ்ணராஜா என்பவர் படுகாயமடைந்து மல்லாவி ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவுமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கல்விளான் கமக்கார அமைப்பின் செயலாளராக அவர் இருப்பதாகவும் அங்கு இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வில் இடம்பெற்று வரும் போட்டி காரணமாகவே துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று புதன்கிழமை (24) இடம்பெற்ற நிலையில் பூசகர் உள்ளிட பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (23) அன்று கோவிலுக்கு சென்றிருந்த காவல்துறை இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரால் கோவில் பணிக்காக வருகை தந்த பூசாரி உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆலயத்தில் சிவன் சிலை பிரதிஸ்டை செய்வதாகவும் அது பல கோடி பெறுமதி எனவும் ஒரு வதந்தி கதையை பரப்பியுள்ளார்கள்.
எந்தவொரு புதிய சிலைபிரதிஸ்டை செய்வதும் நடைபெறமாட்டாது. தயவுசெய்து வதந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்பதை ஆலய பூசகர் என்ற வகையில் தெரியப்படுத்த விரும்புகின்றேன்." என்றார்
எனினும் புதிய சிவலிங்க பிரதிஸ்டை தொடர்பில் தென்பகுதியை சேர்ந்த பலர் முகநூலில் வதந்தி பரப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .
எதிர்கட்சி தலைவரை நேற்றையதினம் நாடாளுமன்றில் சந்திருந்த நிலையில் இன்று முதல் தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா அறிவித்துள்ளார்.
அதன்படி, தான் நேர்மையான, மக்களின் அரசியல் தலைவராக இருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாகவும், பிறிதொரு கட்சிக்குள் சென்று அவர்களின் கொள்கைகளை மாற்றவிரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
முதலில் அரசியலுக்கு வர விரும்பியிருக்கவில்லை. எனினும் தற்போது நேரடி அரசியலில் ஈடுபட முடிவுசெய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதற்காக புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளேன். அதில் இளைஞர்கள், படித்த மக்களை இணைத்துக்கொண்டு உண்மையான அரசியல் ஒன்றைச் செய்யவுள்ளேன எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment