கிழக்கு தைவானை நோக்கி நகரும் கெய்மி புயல்


தைவானில் இன்று புதன்கிழமை கெய்மி புயல் வலுவடைந்து வருவதாக உறுதி செய்யப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலின் தாக்கம் இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தரையிறக்கப்பட்டன. குறிப்பாக 200 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. சில இடங்களில் தொடருந்து சேவைகளும் நிறுத்தி வைக்க்பபட்டுள்ளன. இந்த போிடரைச் சமாளிக்க 29 ஆயிரம் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

கெய்மி புயல் தைவானின் வடகிழக்கு கடற்கரையில் இரவு 10 மணிக்கு (1400 GMT) கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் தெற்கு மற்றும் மத்திய தைவானில் சுமார் 1,800 மிமீ அல்லது 70 அங்குல மழையைக் கொண்டு வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கெய்மி அதிகபட்சமாக மணிக்கு 190 கிலோமீட்டர் (118 மைல்) வேகத்தில் காற்று வீசியது. புயல் ஏற்கனவே ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதித்துள்ளது.

இந்த மழை ஐந்து நாட்களில் ஒரு டஜன் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்தியது, குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் என்று பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கூறினர்.

தைவான் ஜலசந்தியைக் கடந்த பிறகு, கெய்மி வியாழன் பிற்பகலில் தென்கிழக்கு சீன மாகாணமான புஜியானைத் தாக்கக்கூடும்.

No comments