மரணவீட்டின் பின்னர் விசேட பேச்சாம்?மறைந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியைகளிற்காக வருகை தந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே. அண்ணாமலை  தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுடன் விசேட சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.

சந்திப்பானது, நேற்று (07) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  பங்கேற்றுள்ளார்.

எதிர்கால அரசியல் கள நிலவரம் மற்றும் திருமலையில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொள்ளவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே. அண்ணாமலை  இலங்கை வந்திருந்தார்.

அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே. அண்ணாமலை போட்டியிட்டிருந்த நிலையில் படுதோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments