இலங்கை திட்டமிட்டு இழுத்தடிக்கிறது:ஜெய்சங்கர்!
அதானி குழுமத்தின் காற்றாலைகள் உள்ளிட்ட தொழில் முதலீடுகள் திட்டமிட்டு இலங்கை அரசினால் தாமதிக்கப்படுவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தித் துறை தொடர்பான கூட்டுத் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எரிசக்தி இணைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் மேம்பாடு, எல்.என்.ஜி விநியோகம், இரு நாடுகளுக்கு இடையே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோகக் குழாய், எரிபொருள், எரிவாயு ஆய்வுத் திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வேளையிலேயே அதானி குழு முதலீட்டு முயற்சிகள் தாமதிக்கப்படுவது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கைக்கான கடனை நீண்ட கால கடனாக நிலைநிறுத்த சீனா மேலும் ஆதரவு தெரிவுப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்காக உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கான இந்திய ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்த பின்னணியில் சீனா அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Post a Comment