உயிரிழந்த தங்காலை மீனவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!


கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை, மதுபானம் எனக் கருதி அருந்திய சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மிகவும் மோசமாகப்  பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு மீனவர்களும் சிங்கப்பூர் வணிகக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments