இணக்கமிருக்கிறதென்கிறார் அங்கயன்!

 


சஜித்திற்கும் தனக்குமிடையே ஓர் ஒற்றுமையாக உள்ளதாக அங்கயன் இராமநாதன் விளக்கமளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்ட நிகழ்வில், சுதந்திர கட்சியின் நாடாhளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து ஆதரவு தெரிவித்துள்ளார். 

இதனிடையே மாவட்ட கல்வி அபிவிருத்திக்கான பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான்;நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன்.எமது மக்களின் கல்வியை மேம்படுத்துவதன் அவசியத்தையும், அதன் இலக்கில் நாம் இருவரும் பயணிப்பதே எமக்கிடையேயான ஓர் ஒற்றுமையாக உள்ளதாக அங்கயன் இராமநாதன் விளக்கமளித்துள்ளார்.

அதேவேளை, 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்கட்சித்தலைவர் வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில், அதனை வரவேற்பதுடன் எமது மக்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் அதனை நாம் வரவேற்போம் "  எனவும் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
No comments