புதிய தகவல்: ஒக்டோபர்5?



ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் மாதம் 5,ஆம் திகதி நடைபெறும் என சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முதலில் எந்த தேர்தல், சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுமா? ஏன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில்  ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெறும் என ஜனாதிபதியும் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தீர்மானமெடுப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிலையில் நவம்பர் 17ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசியலைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் கட்டாயம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆயினும் தேர்தல் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது சில தரப்புக்கள் பேசிவருகின்றன.

எதிர்வரும் ஜூலை மாதம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் மாதம் 5,ஆம் திகதி நடைபெறும் என சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


No comments