கடலில் நீராடிய 10 பேர் வைத்தியசாலையில்
பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த பத்து பேரின் உடலில் ஜெல்லிமீன் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் உடலின் சிலபகுதிகளில் சிவத்தல், அரிப்பு மற்றும் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment