தேர்தல் பரப்புரை:யாழ்.வரும் ரணில்!
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களை வடகிழக்கை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடுக்கிவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் நடைபெற்றிருந்தது.
ஆரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் பங்கபற்றுதலுடன் கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது.
ஜனாதிபதியால் வடக்கு விஜயத்தின் போது முக்கிய நகர்வாக அரச நியமனங்கள் 400பேரிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.அண்மைய பொருளாதார நெருக்கடி காரணமாக அரச நியமனங்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.எனினும் தேர்தல் துருப்புச்சீட்டாக அரச நியமனங்களை மீண்டும் வழங்க ரணில் விக்கிரமசிங்க தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே தேர்தல் துருப்புச்சீட்டாக வடக்கில் மதுபானச்சாலைகளை ரணில் விக்கிரமசிங்க அள்ளிவீசிவருகின்றார்.கிளிநொச்சியில் ஒரு மாத காலத்தினுள் மட்டும் ஆறு மதுபானச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்படும் அனைத்து மதுபானச்சாலை அனுமதிகளும் தமது ஆட்சியின் போது இரத்துச்செய்யப்படுமென எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாச எச்சரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment