எட்டிக்கூடப்பார்க்காத டக்ளஸ்!



சீமெந்து தொழிற்சாலையை திறந்து வைக்க மீண்டும் கிளிநொச்சி பொன்னாவெளி செல்லவுள்ளதாக கூறி வந்திருந்த அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது முயற்சியை கைவிட்டுள்ளார்.

இதனிடையே பொன்னாவெளி கிராமத்திலுள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவருடன் சேர்ந்தவர்களும் முயற்சிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீண்டும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

எனினும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (தமிழ் தேசிய கூட்டமைப்பின்) உள்ளூர் அதிகர சபைக்கான தேர்தல் அறிக்கை 2018 ஜனவரி இறுதிப்பகுதியில் வவுனியாவில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் மாவை சேனாதிராஜாவினால் கூட்டமைப்பின் தலைவரும் அன்றைய எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா சம்பந்தனிடம் வைபவரீதியாக கையளித்து வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது

தேர்தல் விஞ்ஞாபனத்தில் கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள பொன்னாவெளியில் சிமெந்து உற்பத்திக்கும் வேலைவாய்ப்புக்காகவும் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்வதென உத்தியோக பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்ததாக ஈபிடிபி தெரிவித்துள்ளது.

இதனிடையே பூநகரி கிராஞ்சியில் கடலட்டை பண்ணைகளிற்கான அட்டை பண்ணை அனுமதிப்பத்திரம் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

எனினும் கிராஞ்சிக்கருகாகவுள்ள பொன்னாவெளி கிராமத்திற்கு செல்வதை டக்ளஸ் தேவானந்தா தவிர்த்திருந்ததாக கூறப்படுகின்றது.


No comments