யாழ். பல்கலையில் நினைவேந்தல்
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் யாழ் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது.
இதன்போது பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment